7வது உலகளாவிய ஃபின்டெக் திருவிழா (GFF) மும்பையில் நடைபெற்றது.
GFF 2026-இன் கருத்துரு “Potential to Impact: Agentic Artificial Intelligence (AI), Tokenisation, Quantum” என்பதாகும்.
இங்கு விவாதிக்கப்பட்ட மூன்று முக்கிய தொழில்நுட்பங்கள் செயல்பாட்டுத் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு, குறியாக்கம் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் ஆகும்.
இதன் முதன்மை அமைப்பாளர்கள் இந்தியக் கொடுப்பனவு மன்றம் (PCI), இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் (NPCI) மற்றும் ஃபின்டெக் ஒருங்கிணைப்பு மன்றம் (FCC) ஆகியவையாகும்.
இந்தத் திருவிழாவிற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), நிதிச் சேவைகள் துறை, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நிதி ஆயோக் உள்ளிட்ட முகவர் அமைப்புகள் ஆதரவளிக்கின்றன.
நம்பகமான, இணைக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிதி அமைப்புகளை உருவாக்க வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் இந்த நிகழ்ச்சி நிரல் கவனம் செலுத்துகிறது.