2025 ஆம் ஆண்டில், கடந்த ஒரு தசாப்தத்தில் உலகளாவிய கட்டாய இடப்பெயர்வில் முதல் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் விவகாரங்களுக்கான ஆணையம் (UNHCR) தெரிவித்துள்ளது.
உலகளவில் கட்டாயமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 123.2 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டில் 117.8 மில்லியனாகக் குறைந்துள்ளது.
கட்டாய இடப்பெயர்வு என்பதில் அகதிகள், தஞ்சம் கோருவோர், உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் (IDPs) மற்றும் மோதல், வன்முறை அல்லது துன்புறுத்தல் காரணமாக இடம்பெயர்ந்த பிற நபர்கள் ஆகியோர் அடங்குவர்.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய அகதிகள் மக்கள் தொகை 41.6 மில்லியனாக இருந்தது, அதே நேரத்தில் 68.6 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் சுமார் 14.7 மில்லியன் இடம்பெயர்ந்த மக்கள் வீடுகளுக்குத் திரும்பினர், இதில் 4.4 மில்லியன் அகதிகள் மற்றும் 10.3 மில்லியன் உள்நாட்டில் இடம் பெயர்ந்த நபர்கள் அடங்குவர் என்ற நிலையில் முக்கியமாக ஆப்கானிஸ்தான், சூடான் மற்றும் சிரியாவில் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.