TNPSC Thervupettagam

உலகளாவிய அபாயங்கள் அறிக்கை 2022

January 16 , 2022 1403 days 603 0
  • உலகப் பொருளாதார மன்றமானது 2022 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அபாயம் என்ற ஒரு அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில், பெருந்தொற்றுக் காலத்தில், உலகின் முதல் 20% (பணக் காரர்கள்) தங்கள் இழப்புகளை மீட்டெடுத்துள்ளனர்.
  • மறுபுறம், அடிமட்டத்தில் உள்ள 20% பேர் மேலும் 5% இழந்துள்ளனர்.
  • சுற்றுச்சூழல் அபாயங்கள் நீண்ட காலம் மற்றும் குறுகிய காலத்திற்கு ஆதிக்கம் செலுத்தும்.
  • காலநிலை சார்ந்த மீட்பு நடவடிக்கையின் தோல்வி, தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பல்லுயிர் இழப்பு ஆகியவை அடுத்த தசாப்தத்தில் உலக மக்கள்தொகைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நிபுணர்களால் உணரப் படுகிறது.
  • மனித சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் இயற்கை வள நெருக்கடி போன்ற சுற்றுச்சூழல் காரணிகளும் இந்தக் காலகட்டத்தில் முதல் 10 இடர்களில் ஒன்றாக இருப்பதாக நம்பப் படுகிறது.
  • இணையதளப் பாதுகாப்பு, பெருந்தொற்று மற்றும் விண்வெளி முன்னேற்றங்களும் உலகப் பொருளாதாரத்திற்கு அபாயங்களாக விளங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்