உலகளாவிய அமைதிக் குறியீடு 2021
June 20 , 2021
1500 days
949
- சிட்னியின் பொருளாதார மற்றும் அமைதி நிறுவனமானது (Institute for Economics and Peace – IEP) 15வது உலகளாவிய அமைதிக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
- உலகளாவிய அமைதிக் குறியீடானது உலகளாவிய அமைதியை மதிப்பிடும் உலகின் ஒரு முன்னணி மதிப்பீடாகும்.
- 2008 ஆம் ஆண்டிலிருந்து முதலிடத்தில் இருந்து வரும் ஐஸ்லாந்து நாடானது மிகவும் அமைதியான நாடாக திகழ்ந்து வருகிறது.
- இதனுடன் நியூசிலாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் முதலிடத்தில் உள்ளன.
- இதில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உலகின் அமைதியற்ற நாடாக திகழ்கிறது.
- இதனைத் தொடர்ந்து ஏமன், சிரியா, தெற்கு சூடான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் உள்ளன.
- இந்தியா 135வது இடத்தில் உள்ளது.
- இந்தியா தெற்காசியப் பிராந்தியத்தில் 5வது இடத்தில் உள்ளது.
- தெற்காசிய பிராந்தியத்தில் பூடான் மற்றும் நேபாளம் ஆகியவை முறையே முதலாவது மற்றும் இரண்டாவது அமைதியான நாடுகளாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

Post Views:
949