இது மனிதவளம், பாதுகாப்பு சார் நிதி ஒதுக்கீடு, தளவாடங்கள், இயற்கை வளங்கள் மற்றும் உத்தி சார் அணுகல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட காரணிகளின் அடிப்படையில் உலகின் வலிமையான இராணுவங்களை தரவரிசைப் படுத்துகிறது.
குறைந்த ஆயுத ஆற்றல் குறியீடு (PwrIndx) மதிப்பெண் ஒட்டு மொத்த இராணுவத் திறனைக் குறிக்கிறது.
860 பில்லியன் டாலர் பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு மற்றும் மேம்பட்ட உலகளாவியச் சொத்துக்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்ற அமெரிக்கா 0.0744 PwrIndx உடன் முதலிடத்தில் உள்ளது.
ரஷ்யாவும் சீனாவும் 0.0788 PwrIndx உடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
இந்தியா 0.1184 PwrIndx உடன் நான்காவது இடத்தில் உள்ளது.
தென் கொரியா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, ஜப்பான், துருக்கி மற்றும் இத்தாலி ஆகியவை தொழில்நுட்பம், பிராந்தியச் செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு முதலீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் பத்து இடங்களைப் பிடித்தன.