உலகளாவிய இடம்பெயரும் இனங்கள் பாதுகாப்பு முன்னெடுப்பு
March 29 , 2026 182 days 246 0
பிரேசிலின் காம்போ கிராண்டேவில் நடைபெற்ற இடம்பெயரும் வனவிலங்கு இனங்கள் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் (CMS) 15-வது உறுப்பினர்கள் மாநாட்டில் (COP15), 'இடம் பெயரும் இனங்களைப் பிடிப்பதற்கான உலகளாவிய முன்னெடுப்பு' (GTI) தொடங்கப் பட்டது.
இது இடம்பெயரும் இனங்களை சட்டவிரோதமாகவும் நிலையற்ற முறையிலும் பிடிப்பதை நிறுத்துவதற்காக அரசாங்கங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்களை உள்ளடக்கிய ஒரு உலகளாவிய முன்னெடுப்பாகும்.
தரவு சேகரிப்பை மேம்படுத்துதல், சட்டங்கள் மற்றும் கொள்கைகளை மிகவும் நன்கு வலுப்படுத்துதல், சமூகப் பங்கேற்பை நன்கு அதிகரித்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.