உலகளாவிய இரசாயனங்கள் கண்காணிப்புத் திட்டம் - UNEP/GEF
July 2 , 2026 29 days 125 0
உலகளவில் அபாயகரமான இரசாயனங்களின் கண்காணிப்பை வலுப்படுத்தச் செய்வதற்காக, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) ஆகியவற்றால் உலகளாவிய இரசாயனங்கள் கண்காணிப்புத் திட்டம் (GCMP) தொடங்கப்பட்டுள்ளது.
இது நீடித்த கரிம மாசுபடுத்திகளுக்கான (POPs) ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை மற்றும் பாதரசம் மீதான மினமாட்டா உடன்படிக்கை ஆகியவற்றின் மதிப்பீட்டிற்கு ஆதரவு அளிக்கிறது.
வளரும் நாடுகளில் இரசாயன மாசுத் தரவு மற்றும் கொள்கை முடிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட GCMP என்பது, சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் கூட்டு நிதியுதவியுடன் கூடிய 23.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒரு முயற்சியாகும்.
அறிவியல் பூர்வமான ஆதாரங்களை உருவாக்குவதற்கும், கண்காணிப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் இரசாயனப் பாதுகாப்பு குறித்த சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இது ஆறு திட்டங்களைச் செயல் படுத்தும்.
POPs என்பவை சுற்றுச்சூழலில் நீண்ட காலம் நிலைத்திருந்து, உணவுச் சங்கிலிகளில் உயிர்த்திரட்சி அடையும் நச்சு இரசாயனங்கள் ஆகும்; அதே நேரத்தில் பாதரசம் என்பது நரம்பு, செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புகளைப் பாதிக்கும் ஒரு நச்சுத் தனிமமாகும்.