உலகளாவிய உடல் பருமன் அட்லஸ் 2026 ஆனது, குழந்தைப் பருவ உடல் பருமனில் உலக அளவில் இரண்டாவது மிக உயர்ந்த நாடாக இந்தியா அமெரிக்காவை முந்தியுள்ளது என்று வெளிப்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையை உலக உடல் பருமன் கூட்டமைப்பு (WOF) வெளியிட்டது.
குழந்தைப் பருவ உடல் பருமனில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2025 ஆம் ஆண்டில் சுமார் 41 மில்லியன் இந்திய குழந்தைகள் மிகை உடல் நிறை குறியீட்டெண் (BMI) கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 14 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் வாழ்ந்து வந்தனர்.
2040 வாக்கில், இந்தியாவில் கிட்டத்தட்ட 20 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனுடன் வாழ்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.