எத்தியோப்பியா மற்றும் இத்தாலி ஆகியவை இணைந்து நடத்திய இரண்டாவது ஐக்கிய நாடுகளின் உணவு அமைப்புகள் உச்சி மாநாடு (UNFSS+4) ஆனது எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் நடைபெற்றது.
இது 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் உச்சி மாநாட்டையும் 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆரம்ப ஆய்வுகளையும் தொடர்ந்து, உணவு முறைகள் மாற்றத்திற்கான உலகளாவிய முன்னேற்றத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த நிகழ்வானது 2030 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டு இலக்குகளை நோக்கிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஒத்துழைப்பு, நிதி மற்றும் முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.