உலகளாவிய உருளைக் கிழங்கு மாநாடானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி முதல் முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்று வருகின்றது.
இந்த மாநாடானது பின்வருவனவற்றுடன் இணைந்து இந்திய உருளைக் கிழங்கு சங்கத்தினால் (Indian Potato Association - IPA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR - Indian Council of Agricultural Research), புது தில்லி,
ICAR - மத்திய உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம், சிம்லா மற்றும்
சர்வதேச உருளைக் கிழங்கு மையம், லிமா, பெரு.
ஹெக்டேருக்கு 30 டன் உற்பத்தித் திறனுடன் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலமானது கடந்த பத்தாண்டுகளாக முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றிற்குப் பிறகு, உருளைக் கிழங்கானது உலகின் மூன்றாவது மிக முக்கியமான உணவுப் பயிராக விளங்குகின்றது.