இந்தியா ஓர் உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுத்துள்ளது.
இந்திய நாடானது அமெரிக்காவினைத் திறம்பட்ட முறையில் பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது மிகவும் விரும்பத்தகு உற்பத்தி மையமாக மாறியுள்ளது.
மற்ற நாடுகளை விட ஒரு விரும்பத்தகு உற்பத்தி மையமாக உற்பத்தியாளர்கள் மத்தியில் இந்தியா வளர்ந்து வரும் விருப்பத்தினை இது குறிக்கிறது.
இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் இந்தத் தரநிலை 2021 ஆம் ஆண்டு கஷ்மேன் & வேக்பீல்டின் உலக உற்பத்தி இடர்க் குறியீட்டில் (Cushman & Wakefield’s 2021 Global Manufacturing Risk Index) பிரதிபலிக்கிறது.
இக்குறியீடானது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசிய பசிபிக் பகுதிகளில் உள்ள 47 நாடுகளைத் தரவரிசைப்படுத்துகிறது.