TNPSC Thervupettagam

உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டாண்மை (PGII) திட்டம்

June 30 , 2022 1141 days 529 0
  • அமெரிக்க அதிபர் பிடன் மற்றும் G7 நாட்டின் தலைவர்கள், உலகளாவிய உள் கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான ஒரு கூட்டாண்மையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.
  • இது சீனாவின் மண்டலம் மற்றும் சாலைத் திட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாக, வளர்ந்து வரும் நாடுகளுக்கு 600 பில்லியன் டாலர் நிதி திரட்டும் ஒரு திட்டமாகும்.
  • இந்த உள்கட்டமைப்புத் திட்டமானது முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் பிரிட்டனில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது.
  • அப்போது சிறப்பான உலகை மீண்டும் கட்டமைத்தல் என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டமானது 2022 உச்சி மாநாட்டில் புது வடிவம் பெறுவதற்கு முன்பு உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டிற்கான கூட்டாண்மைத் திட்டம் என மறுபெயரிடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்