தேசிய நிதி உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (NaBFID) 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
இது உள்கட்டமைப்பு மேம்பாட்டு வங்கி (IDB) என மறுபெயரிடப்படும்.
முழுவதும் அரசுக்குச் சொந்தமான இது, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் கீழ் அகில இந்திய நிதி நிறுவனம் (AIFI) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
NaBFID வங்கியின் ஆணையில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நீண்ட கால நிதியளித்தல், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பு கடனை மறு நிதியளித்தல் மற்றும் தனியார் முதலீட்டைத் திரட்டுதல் ஆகியவை அடங்கும்.
இந்த மறுசீரமைப்பு, பன்னாட்டு உள்கட்டமைப்பு நிதியுதவி மற்றும் சர்வதேச மூல தனத்தைத் திரட்டுவது ஆகியவற்றில் ஈடுபடுவதுடன், உலகளாவிய நிதி நிறுவனமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டில், இது இந்தியாவின் உள்கட்டமைப்பு நடவடிக்கை மற்றும் நீண்ட கால மேம்பாட்டு உத்தியை வலுப்படுத்துகிறது.