உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு பற்றிய அறிக்கை 2023
May 18 , 2023 720 days 459 0
உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் என்ற அமைப்பானது இந்த வருடாந்திர அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதுமான உள்நாட்டில் இடம் பெயர்ந்த நபர்களின் எண்ணிக்கை (IDPs) 71.1 மில்லியனை எட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 2.5 மில்லியன் இடப்பெயர்வுகளுடன் உலகின் நான்காவது அதிக அளவில் பேரிடர் சார்ந்த இடப்பெயர்வானது பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டில், 8.16 மில்லியன் பேரிடர் சார்ந்த இடப்பெயர்வுகளுடன் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இடப்பெயர்வானது பாகிஸ்தானில் பதிவாகியுள்ளது.
5.44 மில்லியன் இடப்பெயர்வுகளுடன் பிலிப்பைன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
3.63 மில்லியனுடன் சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது.
2.4 மில்லியனுடன் நைஜீரியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
உக்ரைனில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, வேகமாக கைமாறி வரும் பகுதிகளில் இருந்து மக்கள் மீண்டும் மீண்டும் வெளியேறியதால், கிட்டத்தட்ட 17 மில்லியன் இடப் பெயர்வுகளை அது தூண்டியது.
மோதல் மற்றும் வன்முறை நிகழ்வானது, உலகளவில் 28.3 மில்லியன் உள்நாட்டு இடப் பெயர்வுகளைத் தூண்டியது.
பேரழிவு சார்ந்த பல இடப்பெயர்வுகளின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்து, 32.6 மில்லியனை எட்டியுள்ளது.