மும்பையில் நடைபெற்ற உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் (WAVES) 13 அம்ச உலகளாவிய ஊடகப் பேச்சுவார்த்தைப் பிரகடனம் (WAVES பிரகடனம்) ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் ரஷ்யா, ஜப்பான், ஐக்கியப் பேரரசு, எகிப்து, சவுதி அரேபியா மற்றும் பல நாடுகள் உட்பட 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன.
பல்வேறு குரல்கள் மற்றும் உள்ளடக்கிய வகையிலான ஊடகச் சூழல் அமைப்புகளை ஊக்குவித்தல் & கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் பொது நலன் சார் உள்ளடக்கத்தினை ஆதரித்தல் ஆகியவை இந்த 13 அம்சங்களில் அடங்கும்.
இது புதுமை, தரவுத் தனியுரிமைகள் மற்றும் எண்ணிமப் பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது என்பதோடு நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மற்றும் உலகளாவிய உள்ளடக்க கூட்டாண்மைகளை ஆதரிக்கிறது.
எண்ணிம ஊடகத்தின் ஜனநாயகத் தன்மை காரணமாக அவற்றின் பாத்திரங்கள் பெருகிய முறையில் ஒன்றுக்கொன்று பரிமாறக் கூடியதாக மாறி விட்ட, உள்ளடக்கப் படைப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் இந்த நெறிமுறை விழிப்புணர்வின் அவசியத்தையும் இந்த அறிவிப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.