உலகளாவிய எதிர்காலத்திற்கான கல்விக் குறியீடு - 2019
February 21 , 2020 1920 days 750 0
பொருளாதார நுண்ணறிவுப் பிரிவானது உலகளாவிய எதிர்காலத்திற்கான கல்விக் குறியீடு – 2019 (Worldwide Education for the Future Index - WEFFI) என்ற ஒரு குறியீட்டை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீடானது மாணவர்களைத் திறன் அடிப்படையிலான கல்வியுடன் சேர்ப்பதற்காக நாடுகள் மேற்கொள்ளும் செயல்திறன்களின் அடிப்படையில் நாடுகளை மதிப்பீடு செய்கின்றது.
இந்தக் குறியீட்டின் கருப்பொருள், “கொள்கையிலிருந்துப் பயிற்சி வரை” என்பதாகும்.
முக்கிய அம்சங்கள்:
இந்தக் குறியீட்டில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்தக் குறியீட்டில் ஸ்வீடன் இரண்டாவது இடத்திலும் நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.
2019 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தக் குறியீட்டில் இந்தியா 53 மதிப்பெண்களுடன் 35வது இடத்தைப் பிடித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் இந்தியா 40வது இடத்தில் இருந்தது.
இந்தக் குறியீட்டில் கென்யா (48வது), நைஜீரியா (49வது) மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு (50 வது) ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.