TNPSC Thervupettagam

உலகளாவிய எதிர்காலம் குறித்த மன்றங்களின் கூட்டம்

January 28 , 2026 4 days 15 0
  • உலகப் பொருளாதார மன்றத்துடன் (WEF) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உலகளாவிய எதிர்காலம் குறித்த மன்றங்களின் (GFCs) கூட்டங்களை நடத்தவுள்ளது.
  • GFCகள் என்பது WEF அமைப்பின் பல்துறை அறிவுசார் வலையமைப்பாகும் என்பதோடு இது உலகளாவியச் சவால்கள் மற்றும் எதிர்காலப் போக்குகள் குறித்த நுண்ணறிவுகளை வழங்க 2013 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தக் குழுக்கள் அழைப்பின் பேரில் மட்டுமே இணைக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலத்திற்குச் செயல்படுகின்றன என்பதோடு இவை பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை வரவழைத்து, ஆராய்ச்சி அடிப்படையிலான ஆலோசனைகளை வழங்குகின்றன.
  • GFCயின் வெளியீடுகள் கொள்கை வகுத்தலை ஆதரிப்பதுடன் WEF முன்முயற்சிகள் மற்றும் டாவோஸ் நிகழ்ச்சி நிரலுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
  • அரசுகள் மீள்திறன் கொண்ட மற்றும் நீடித்த வளர்ச்சி மாதிரிகளை உருவாக்குவதற்கு உதவுவதற்காக, அபாயங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிவதே இந்த மன்றத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்