TNPSC Thervupettagam

உலகளாவிய எரிசக்தி கண்காணிப்பு அறிக்கை

February 16 , 2026 17 hrs 0 min 42 0
  • இந்த அறிக்கையின்படி, உலகளாவிய காற்றாலை மற்றும் பயன்பாட்டு அளவிலான எதிர்காலச் சூரிய ஆற்றல் திட்டங்கள் 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 4.9 டெரா வாட் (TW) ஐ எட்டியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் 4.4 TW ஆக இருந்த மொத்த திட்டங்கள் 2025 ஆம் ஆண்டில் 4.9 TW ஆக 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • சீனாவானது 1.5 TWக்கும் அதிகமான வருங்காலத் திறனுடனும், 448 ஜிகாவாட் (GW) கட்டுமானத்திலும் முன்னணியில் உள்ள அதே நேரத்தில் இந்தியாவில் சுமார் 125 GW கட்டுமானத்திலும், 163 GWக்கும் அதிகமான செயல்பாட்டுத் திறனுடனும் உள்ளது.
  • G7 நாடுகள் உலகளாவிய வருங்கால காற்று மற்றும் சூரிய மின்சக்தி திறனில் 11 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளன, மொத்த ஒருங்கிணைந்த திட்டங்கள் சுமார் 520 GW ஆகும்.
  • உலகளவில், 758 GW திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன என்ற நிலையில் இதில் கிட்டத் தட்ட நான்கில் மூன்று பங்கு சீனா மற்றும் இந்தியாவில் அமைந்துள்ளது.
  • COP28 உச்சி மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட 2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி இலக்கை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு தற்போதைய முன்னேற்றம் போதுமானதாக இல்லை என்று அறிக்கை குறிப்பிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்