உலகளாவிய எரிவாயு அறிக்கை 2026 இன் படி, உலகளாவிய இயற்கை எரிவாயு தேவையானது 2025 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 4,202 பில்லியன் கன மீட்டரை (bcm) எட்டியுள்ளது.
இந்த அறிக்கையை சர்வதேச எரிவாயு ஒன்றியம் (IGU), ஸ்னாம் மற்றும் ரைஸ்டாட் எனர்ஜி ஆகியவை வெளியிட்டன.
முக்கியமாக விநியோக இடையூறுகள் மற்றும் ஹார்முஸ் நீர்ச்சந்தி நெருக்கடியுடன் தொடர்புடைய அதிக விலைகள் காரணமாக 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிவாயு தேவை 7 bcm குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிவாயு விநியோகமும் சாதனை அளவாக 4,147 bcm ஐ எட்டியது, அதே வேளையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) நிகர இறக்குமதி 580 bcm ஐ எட்டியது.
அதிக LNG விலையால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டன, அதே நேரத்தில் வட அமெரிக்காவின் எரிவாயு தேவை 2026 ஆம் ஆண்டில் 10 bcm அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியாவில், 2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் அதிகபட்ச மின் தேவை சாதனை அளவாக 271 ஜிகாவாட் (GW) ஆக உயர்ந்தது, இது இயற்கை எரிவாயு சார்ந்த மின் உற்பத்தி நிலையங்களின் பயன்பாட்டை அதிகரித்தது.