உலகளாவிய ஏரிகளில் ஆக்ஸிஜன் நீக்க நிகழ்வு நெருக்கடி
April 9 , 2025 21 days 72 0
நீண்ட காலப் புவி வெப்பமடைதலுடன் கூடிய குறுகிய கால வெப்ப அலைகள் ஆனது, உலகம் முழுவதும் உள்ள ஏரிகளின் மேற்பரப்பில் பரவியுள்ள நீர்மத்தில் கரைந்துள்ள ஆக்ஸிஜனின் (DO) அளவைக் குறைக்கின்றன.
உலகளவில் உள்ள ஏரிகளில் காணப்படும் சராசரி ஆக்ஸிஜன் இழப்பு விகிதம் என்பது கடல்கள் மற்றும் ஆறுகளில் காணப்படுவதை விட விரைவாக உள்ளது.
புவி வெப்பமடைதல் காரணமாக நீரின் கரைதிறன் குறைவது உலகளாவிய ஏரிகளில் 55 சதவீத மேற்பரப்பு ஆக்ஸிஜன் இழப்பிற்குக் காரணமாகிறது.
10 சதவீத மேற்பரப்பு ஆக்ஸிஜன் இழப்பிற்கு ஊட்டச்செறிவு காரணமாகும்.
ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா மற்றும் தென் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஆக்ஸிஜன் நீக்கம் மிக விரைவாக நிகழும் என்று கணிக்கப்பட்டுள்ளது.