ஆர்டன் கேபிடல் வெளியிட்ட கடவுச் சீட்டுக் குறியீடு, 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கடவுச் சீட்டுத் தரவரிசையை வெளியிட்டது.
2025 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உலகின் வலிமையான கடவுச் சீட்டைக் கொண்டுள்ளது.
உலகளாவிய கடவுச் சீட்டு தரவரிசையில் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகியவை இரண்டாவது இடத்தில் உள்ளன.
இந்தியக் குடிமக்களுக்கு மிதமான கட்டுப்பாடுகளுடன் கூடிய சர்வதேசப் பயண அணுகலைக் காட்டும் வகையில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது.
2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா 9வது இடத்திலும், ஐக்கியப் பேரரசு 8வது இடத்திலும் உள்ளது.
இந்தத் தர வரிசைகள் நுழைவு இசைவு சீட்டு இல்லாத, வருகையின் போது நுழைவு இசைவு சீட்டுப் பெறுதல் மற்றும் இணைய வழிப் பயண அங்கீகாரம் (ETA) அணுகலைக் கணக்கிடுகின்றப் போக்குவரத்து மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.