TNPSC Thervupettagam

உலகளாவிய கரிம வரவு செலவு எச்சரிக்கை

November 21 , 2025 16 hrs 0 min 21 0
  • உலகளாவியப் புதைபடிவ எரிபொருள் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 2025 ஆம் ஆண்டில் 1.1% அதிகரித்து, இதுவரையில் இல்லாத அளவாக 38.1 பில்லியன் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிலப் பயன்பாட்டு மாற்ற உமிழ்வு 4.1 பில்லியன் டன்களாகக் குறைந்ததால், மொத்த CO உமிழ்வு (புதைபடிவ எரிபொருள்கள் மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றம்) இந்த ஆண்டு சற்று குறைவாக உள்ளது.
  • 2023–24 ஆம் ஆண்டு எல் நினோ செயல்பாடுகள் முடிந்த பிறகு நில கார்பன் பிடிப்பு எல் நினோவுக்கு முந்தைய நிலைக்கு மீண்டது.
  • பருவநிலை மாற்றம் ஆனது நிலம் மற்றும் கடல் கார்பன் பிடிப்புகளை பலவீனப்படுத்தியுள்ளது என்பதோடு இது 1960 ஆம் ஆண்டு முதல் வளிமண்டல CO அதிகரிப்பில் 8% பங்களிக்கிறது.
  • வெப்பமயமாதலை 1.5°C வரம்பிற்குள் கட்டுப்படுத்துவதற்கான மீதமுள்ள கார்பன் வரவு செலவு மதிப்பு 170 பில்லியன் டன்கள் ஆகும் என்பதோடு இது 2025 ஆம் ஆண்டு உமிழ்வு விகிதத்தில் நான்கு ஆண்டுகளுக்கு சமமாகும்.
  • சீனாவின் உமிழ்வு 0.4%, இந்தியாவின் உமிழ்வு 1.4%, அமெரிக்காவின் உமிழ்வு 1.9% மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உமிழ்வு 0.4% அதிகரிக்கும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.
  • ஜப்பானின் உமிழ்வு 2.2% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்