உலக சுகாதார அமைப்பானது, 2025 ஆம் ஆண்டில் கருவுறாமைகுறித்த அதன் முதல் உலகளாவிய வழிகாட்டுதலை வெளியிட்டது.
12 மாதங்கள் அளவிலான வழக்கமான காப்பு சாராத உடலுறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைய தவறுவது கருவுறாமை என வரையறுக்கப்படுகிறது.
இது உலகளவில் இனப்பெருக்க வயதுடைய 6 பேரில் ஒருவரை பாதிக்கிறது.
இந்த வழிகாட்டுதலில் கருவுறாமைநிலையைத்தடுத்தல், அதைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான 40 ஆதார அடிப்படையிலான பரிந்துரைகள் உள்ளன.
இது தேசிய சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைக்கப்பட்ட செலவு குறைந்த கருவுறுதல் நல சேவையை ஊக்குவிக்கிறது என்பதோடு மேலும் வாழ்க்கை முறை சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் உளவியல் சார்ந்த ஆதரவை வலியுறுத்துகிறது.
பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான கருவுறுதல் நலச் சேவைக்கான சிறந்த அணுகலுக்காக, வழிகாட்டுதல்களை உள்ளூர்ச் சூழல்களுக்கு ஏற்ப அதனை மாற்றி அமைக்கவும், அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் வேண்டி உலக நாடுகள் ஊக்குவிக்கப் படுகின்றன.