TNPSC Thervupettagam

உலகளாவிய கார்பன் உமிழ்வு 2026

November 17 , 2026 3 days 89 0
  • உலகளாவிய கார்பன் திட்டத்தின் கூற்றுப்படி, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளியேறும் உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு (CO₂) உமிழ்வு 2026 ஆம் ஆண்டில் 42.2 பில்லியன் டன்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது 2025 ஆம் ஆண்டை விட 0.4% குறைவாகும்.
  • தூய்மையான எரிசக்தியில் ஏற்பட்ட முன்னேற்றத்தை விட, ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டதால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகத் தடைகளே இந்தக் குறைவுக்கு முக்கியக் காரணமாகும்.
  • எண்ணெய் உமிழ்வு கிட்டத்தட்ட 2% மற்றும் இயற்கை எரிவாயு உமிழ்வு 0.3% குறைந்துள்ளது; அதே நேரத்தில் நிலக்கரி உமிழ்வு 0.6% அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் புதைபடிவ எரிபொருள் உமிழ்வு 4.4% அதிகரித்துள்ளது; அதே சமயம் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உமிழ்வு தலா சுமார் 1% குறைந்துள்ளது.
  • காடழிப்பு மற்றும் நிலக்கரி சதுப்பு நிலத் தீ போன்ற நிலப் பயன்பாட்டு மாற்றங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு (CO₂) உமிழ்வு 1% அதிகரித்துள்ளது.
  • 21 ஆம் நூற்றாண்டில் உலகளாவிய புதைபடிவ எரிபொருள் கார்பன் உமிழ்வு குறைவது இது மூன்றாவது முறையாகும்; இதற்கு முன்பு 2009 உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் 2020 ஆம் ஆண்டின் கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றின் போது குறைந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்