காற்றாலை ஆற்றல் மற்றும் தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
காற்றாலை ஆற்றல் என்பது புதுப்பிக்கத்தக்க மற்றும் புதைபடிவமற்ற மின்சார ஆதாரமாகும் என்பதோடு இது நகரும் காற்றின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி காற்றாலைகள் மூலம் உருவாக்கப்படுகிறது.
இந்தியாவின் நிறுவப்பட்ட காற்றாலை மின்சாரம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 21.04 கிகாவாட்டில் (GW) இருந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 56.09 கிகாவாட் ஆக அதிகரித்துள்ளது, இதன் மூலம் இந்தியா உலகின் 4 வது பெரிய காற்றாலை மின்சார உற்பத்தியாளராக உள்ளது.
‘Wind Energy: From Ambition to Acceleration’ என்ற கருத்துருவின் கீழ் 2026 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று கோவாவில் இந்த மாநாட்டை இந்தியா தொகுத்து வழங்கியது.
2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய கருத்துரு ‘Our wind, our community’ என்பதாகும்.