உலகளாவிய குளிர்விப்பு முறையின் போக்குகள் கண்காணிப்பு அறிக்கை 2025
November 15 , 2025 13 hrs 0 min 13 0
2025 ஆம் ஆண்டு உலகளாவிய குளிர்விப்பு முறையின் போக்குகள் கண்காணிப்பு அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அமைப்பின் குளிர்விப்பு முறைகள் கூட்டணி வெளியிட்டது.
இந்த அறிக்கை பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற 30வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP30) வெளியிடப்பட்டது.
2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய குளிர்விப்புத் தேவையானது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.
அதிகரித்து வரும் காற்றுப் பதனாக்கிகளின் தேவை, நிலையான தீர்வுகள் இல்லாமல் அது தொடர்பான CO2 உமிழ்வை இரட்டிப்பாக்கி 7.2 பில்லியன் டன்களாக உயர்த்தக் கூடும்.
ஒரு நிலையான குளிர்விப்பு செயல் முறை, 2050 ஆம் ஆண்டிற்குள் உமிழ்வை 64% குறைத்து, மின்சாரம் மற்றும் மின் கட்டமைப்பு முதலீடுகளில் 43 டிரில்லியன் டாலரை சேமிக்கும்.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது குளிர்விப்புக்கான போதுமான அணுகலைக் கொண்டிருக்கவில்லை என்பதோடுஎந்தவித நடவடிக்கையும் இல்லை எனில் 2050 ஆம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கக் கூடும்.