TNPSC Thervupettagam

உலகளாவிய சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கை 2025

December 13 , 2025 14 hrs 0 min 25 0
  • நைரோபியில் நடைபெற்ற 7வது UNEP அமர்வின் போது UNEP ஆது 7வது உலகளாவிய சுற்றுச்சூழல் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டது.
  • பசுமை இல்ல வாயு உமிழ்வானது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2024 ஆம் ஆண்டில் உலகம் 1.55°C வெப்பமயமாதலை எட்டியதாகவும் அறிக்கை கூறுகிறது.
  • ஒரு மில்லியன் இனங்கள் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன என்ற நிலையில் மேலும் 40% வரை நிலம் தரமிழந்து வருகிறது.
  • பருவநிலைப் பேரழிவுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 143 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகிறது என்ற நிலையில் மாசுபாடு 9 மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.
  • உலகில் 8,000 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகள் உள்ளன இதனால் கடுமையான சுகாதாரம் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன.
  • 1972 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட UNEP ஆனது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முக்கிய உலகளாவிய அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்