உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வெள்ளையறிக்கையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு பங்காக செய்யப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) முதலீடுகளில், 11 நாடுகளில் இந்தியா 8வது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா 2010 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், தனது 2024-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.2% முதல் 1.8% வரை செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடு செய்துள்ளது.
அமெரிக்காவும் சிங்கப்பூரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்ச செயற்கை நுண்ணறிவு முதலீட்டுப் பங்கைக் கொண்டு முன்னணியில் உள்ளன.
2010 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முதலீடுகளில் சுமார் 65%-ஐ அமெரிக்காவும் சீனாவும் கூட்டாகக் கொண்டுள்ளன.
தரவு மையங்கள் உட்பட உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு முதலீடுகள், 2010 ஆம் ஆண்டு முதல் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளன.
அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதலீடுகளாக இந்தியா 67 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான அளவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.