TNPSC Thervupettagam

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முதலீடுகள்

February 5 , 2026 12 days 73 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வெள்ளையறிக்கையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு பங்காக செய்யப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) முதலீடுகளில், 11 நாடுகளில் இந்தியா 8வது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
  • இந்தியா 2010 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், தனது 2024-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.2% முதல் 1.8% வரை செயற்கை நுண்ணறிவுத் துறையில் முதலீடு செய்துள்ளது.
  • அமெரிக்காவும் சிங்கப்பூரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிகபட்ச செயற்கை நுண்ணறிவு முதலீட்டுப் பங்கைக் கொண்டு முன்னணியில் உள்ளன.
  • 2010 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முதலீடுகளில் சுமார் 65%-ஐ  அமெரிக்காவும் சீனாவும் கூட்டாகக் கொண்டுள்ளன.
  • தரவு மையங்கள் உட்பட உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு முதலீடுகள், 2010 ஆம் ஆண்டு முதல் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளன.
  • அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதலீடுகளாக இந்தியா 67 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான அளவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்