ஐஎம்டி உலகப் போட்டி மையத்தால் தயாரிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் ஐஎம்டி உலக டிஜிட்டல் போட்டித் திறன் தரவரிசையில் இந்தியா 44வது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் உலகின் மிகவும் டிஜிட்டல் போட்டிமிக்க பொருளாதாரமாக அமெரிக்கா தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூரும் மூன்றாவது இடத்தில் சுவீடனும் உள்ளன.
டிஜிட்டல் அறிவு, தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால தயார்நிலை ஆகிய மூன்று காரணிகளில் ஒட்டுமொத்த முன்னேற்றம் காரணமாக இந்தியா 2018 ஆம் ஆண்டின் தரவரிசையில் இருந்து நான்கு இடங்கள் முன்னேறியுள்ளது.