2021 ஆம் ஆண்டு உலகளாவிய திறன் அறிக்கையின்படி, உலகளவில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது.
இந்த அறிக்கையானது கோர்செரா எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் கல்வி பயிலும் மக்கள் மேகக் கணிமை (83%) மற்றும் இயந்திர கற்றல் (52%) மற்றும் கணிதத் திறன்கள் (54%) போன்ற டிஜிட்டல் திறன்களில் அதிக தேர்ச்சியையும் கொண்டுள்ளனர்.
தரவுப் பகுப்பாய்வு திறன் (25%) மற்றும் புள்ளிவிவர நிரலாக்கத்திறன் (15%) போன்ற டிஜிட்டல் திறன்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது.