TNPSC Thervupettagam
July 5 , 2026 2 days 174 0
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய திறன் சவாலில் இந்தியா ஐந்து பதக்கங்களை (3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்) வென்றுள்ளது.
  • இந்த நிகழ்வானது சீனா, ஷாங்காயில் திட்டமிடப்பட்டுள்ள 48-வது உலகத் திறன் போட்டிக்கான (2026) ஒரு ஆயத்தப் போட்டியாகும்.
  • உலகத்திறன் இயக்கத்தின் கீழ் 16 உலகத்திறன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
  • சேர்க்கை உற்பத்தி, மேகக் கணிமை மற்றும் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது.
  • 3D டிஜிட்டல் விளையாட்டுக்கான கலைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், வண்ணம் தீட்டுதல் மற்றும் அலங்கரித்தல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வெல்லப்பட்டதுடன் இது திறன் இந்தியா முயற்சிகளின் கீழ் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் திறன் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்