ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய திறன் சவாலில் இந்தியா ஐந்து பதக்கங்களை (3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம்) வென்றுள்ளது.
இந்த நிகழ்வானது சீனா, ஷாங்காயில் திட்டமிடப்பட்டுள்ள 48-வது உலகத் திறன் போட்டிக்கான (2026) ஒரு ஆயத்தப் போட்டியாகும்.
உலகத்திறன் இயக்கத்தின் கீழ் 16 உலகத்திறன் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 போட்டியாளர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
சேர்க்கை உற்பத்தி, மேகக் கணிமை மற்றும் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது.
3D டிஜிட்டல் விளையாட்டுக்கான கலைப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், வண்ணம் தீட்டுதல் மற்றும் அலங்கரித்தல் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வெல்லப்பட்டதுடன் இது திறன் இந்தியா முயற்சிகளின் கீழ் இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் திறன் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.