உலகளாவிய தூசு உமிழ்வுகளில் மனித நடவடிக்கைகளின் தாக்கம்
December 28 , 2023 684 days 459 0
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆனது, “மணல் மற்றும் தூசுப் புயல்கள்: வேளாண்மையில் தணிப்பு, ஏற்பு, கொள்கை மற்றும் இடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்கான வழிகாட்டி” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வேளாண்மையானது ஒரு முக்கிய மனித நடவடிக்கை சார்ந்த காரணியாக இருப்பதோடு, மனித நடவடிக்கைகள் உலகளாவிய தூசு உமிழ்வுகளில் 25 சதவீதத்தை பங்களிக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும், இரண்டு பில்லியன் டன்களுக்கும் அதிகமான மணல் மற்றும் தூசுகள் பூமியின் வளிமண்டலத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்கின்றன.
மணல் மற்றும் தூசுப் புயல்கள் என்பது சிறிய துகள்களின் குழுமத்தை மிக அதிக உயரத்திற்கு கொண்டுச் செல்லும் வலுவான மற்றும் சுழல் காற்று என்று குறிப்பிடப் படுகின்ற ஒரு வானிலை நிகழ்வு ஆகும்.
அவை மனித ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
மணல் மற்றும் தூசுப் புயல்கள் 17 நிலையான மேம்பாட்டு இலக்குகளில் 11 இலக்குகளை அடைவதில் ஒரு வலுவான சவாலை ஏற்படுத்துகின்றன.
நிலப்பயன்பாட்டில் மாற்றம், வேளாண்மை, நீர் வழிகளின் திசைமாற்றம் மற்றும் காடழிப்பு போன்ற மானுடவியல் சார்ந்த காரணிகள் 25 சதவீதத்திற்கு பங்களிக்கச் செய்கின்றன.