TNPSC Thervupettagam

உலகளாவிய நகரங்கள் குறியீடு 2026

September 30 , 2026 12 hrs 0 min 23 0
  • ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் உலகளாவிய நகரங்கள் குறியீடு (GCI) 2026-இல் 1,000 நகரங்களில் டெல்லி 268-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • உலகளாவிய நகரங்கள் குறியீடு என்பது ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் வெளியிடும் ஒரு வருடாந்திர அறிக்கையாகும், இது பொருளாதாரம், மனித மூலதனம், வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல் மற்றும் ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்களை மதிப்பிடுகிறது.
  • இக்குறியீட்டில் நியூயார்க் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து லண்டன், பாரிஸ், சியாட்டில் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • இந்திய நகரங்களில், டெல்லி (268) மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து பெங்களூரு (311), மும்பை (330), சென்னை (381), ஹைதராபாத் (421) மற்றும் புனே (427) ஆகிய நகரங்கள் உள்ளன.
  • சுமார் 100 இந்திய நகரங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் 100 நகரப் பொருளாதாரங்களில் 55 இந்திய நகரங்கள் இடம் பிடித்து உள்ளன.
  • பெங்களூரு 20 இடங்கள் முன்னேறி "கவனிக்க வேண்டிய நகரம்" எனப் பட்டியலிடப் பட்டுள்ளது, அதே நேரத்தில் மனித மூலதனத்தில் டெல்லி உலகளவில் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்