6வது உலகளாவிய நிதி சார் தொழில்நுட்ப விழாவானது (GFF) மும்பையில் நடத்தப் பட்டது.
இந்த நிகழ்வின் மூலம் இந்தியாவும் ஐக்கியப் பேரரசும் உலகளாவிய நிதி நிலப் பரப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டாண்மையை உருவாக்கின.
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் ஒவ்வொரு மாதமும் 20 பில்லியன் பரிவர்த்தனைகளைச் செயலாக்குகின்றன.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நிதியளிப்பில் உலகளவில் முதல் மூன்று நிதி சார் தொழில்நுட்பச் சூழல் அமைப்புகளில் இந்தியா இடம்பிடித்தது.
இந்திய செயற்கை நுண்ணறிவு திட்டமானது சமமான அணுகல், மக்கள்தொகை அளவீடுகளுக்கான திறன் மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.