உலக வானிலை அமைப்பு (WMO) ஆனது அதன் "உலக நீர்வளங்களின் நிலை 2024" அறிக்கையை வெளியிட்டது.
2024 ஆம் ஆண்டில், உலகளாவிய நதிப் படுகைகளில் சுமார் 60 சதவீதம் வறட்சி அல்லது வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொண்டன அதே நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு படுகைகளில் மட்டுமே சாதாரண நீரியல் நிலைகள் பதிவாகின.
2024 ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பகுதியானது வானிலை, பருவநிலை மற்றும் நீர் தொடர்பான பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டது.
யாகி புயல் 850க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பலி வாங்கியதோடு, வியட்நாம், மியான்மர், சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் லாவோஸ் முழுவதும் 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பனிப்பாறைகளில் 450 ஜிகா டன் பனி இழப்பு பதிவாகியது என்ற நிலையில் இது 180 மில்லியன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நீச்சல் குளங்களை நிரப்ப போதுமானது என்பதோடு மேலும் இது 1.2 மில்லிமீட்டர் அளவிலான கடல் மட்ட உயர்வுக்குப் பங்களித்தது.