உலகளாவிய நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறன் கண்காணிப்பு அறிக்கை 2025
October 25 , 2025 11 days 49 0
இந்த அறிக்கை உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டது.
நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறன் (AMR) ஆனது உயிர் காக்கும் சிகிச்சைகளின் செயல்திறனைக் குறைப்பதன் மூலம் உலக ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறன் மற்றும் பயன்பாட்டுக் கண்காணிப்பு அமைப்பு (GLASS) நாடுகள் கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கவும் தரப்படுத்தப்பட்ட தரவுகளைச் சேகரிக்கவும் வேண்டி நன்கு உதவுகிறது.
2023 ஆம் ஆண்டில், 104 நாடுகளில் 23 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப் படுத்தப் பட்ட இரத்த ஓட்டம், சிறுநீர் பாதை, இரைப்பை குடல் தொற்றுகள் மற்றும் "சிறுநீரக-பிறப்புறுப்பு கொனோரியா" (யூரோஜெனிட்டல் கொனோரியா) பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
2023 ஆம் ஆண்டில் 93 தொற்று-நோய்க்கிருமி- நுண்ணுயிர்க் கொல்லி கலப்புகளுக்கான ஈடு செய்யப் பட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய AMR மதிப்பீடுகளை இந்த அறிக்கை வழங்குகிறது.
இது 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான 16 முக்கிய நோய்க்கிருமி- நுண்ணுயிர்க் கொல்லி சேர்க்கைகளுக்கான எதிர்ப்புத் திறன் போக்குகளைக் கண்காணிக்கிறது.
தேசியத் தரவு முழுமையை மதிப்பிடுவதற்கான ஒரு மதிப்பெண் வழங்கல் முறையை இந்த அறிக்கை அறிமுகப்படுத்துகிறது மற்றும் உலகளவில் AMR கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது.