வெல்துங்கர்ஹில்ஃப் (WHH), ஹெல்வெட்டாஸ் மற்றும் அமைதி மற்றும் ஆயுத மோதலுக்கான சர்வதேச சட்ட நிறுவனம் (IFHV) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட உலகளாவிய பட்டினிக் குறியீடு 2026 (GHI) ஆனது, உலகளாவிய பட்டினி மதிப்பெண்ணை 18.1 எனப் பதிவு செய்துள்ளது.
உலகளாவிய மதிப்பெண் 2018 ஆம் ஆண்டில் 17.6 லிருந்து 2026 ஆம் ஆண்டில் 18.1 ஆக மோசமடைந்தது, இது மிதமான பட்டினிப் பிரிவில் உள்ளது.
ஊட்டச்சத்தின்மை, குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு, குழந்தைகளின் உடல் மெலிவு மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே குழந்தை இறப்பு ஆகிய நான்கு குறிகாட்டிகளை GHI அளவிடுகிறது.
சோமாலியா, புருண்டி, சாட், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் மடகாஸ்கர் உள்ளிட்ட எட்டு நாடுகள் ஆபத்தான பட்டினி அளவைக் கொண்டிருப்பதாக வகைப் படுத்தப் பட்டுள்ளன.
துணை-சஹாரா ஆப்பிரிக்கா 27.5 மதிப்பெண்களுடன் கடுமையான பட்டினி அளவை பதிவு செய்துள்ளது, அதே சமயம் தெற்காசியா 23.5 மதிப்பெண்களைப் பெற்று கடுமையான பிரிவில் உள்ளது.
ஆயுத மோதல்கள், பருவநிலைப் பாதிப்புகள் மற்றும் குறைக்கப்பட்ட உதவி நிதியுதவி ஆகியவை உணவுப் பாதுகாப்பின்மையை மோசமாக்குகின்றன, அதே சமயம் நேபாளம், உகாண்டா மற்றும் டோகோ ஆகியவை பட்டினியைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளன.