உலகளாவிய பதின்ம வயதினரின் புகைபிடித்தல் குறித்த WHO அறிக்கை
October 11 , 2025 12 days 34 0
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, உலகளவில் 13 முதல் 15 பேர் வரையிலான சுமார் 15 மில்லியன் சிறார்கள் வயது வந்தவர்களை விட அதிக எண்ணிக்கையில் மின்னணு-சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.
உலகளவில் 9.1 மில்லியன் சிறுவர்களும் 5.6 மில்லியன் சிறுமிகளும் தற்போது மின்னணு சிகரெட் /வேப் பயன்பாட்டில் ஈடுபடுவதாக அறிக்கை கூறுகிறது என்ற நிலையில் இது உலகளவில் 7.2% இளம் பருவத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
மின்னணு சிகரெட் புகைத்தல்/வாப்பிங் ஆனது பல தசாப்தங்களாக மேற்கொண்டு வந்த புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடும் என்று WHO எச்சரிக்கிறது.
மின்னணு சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விளம்பரத்தைத் தடை செய்யும் 2019 ஆம் ஆண்டு மின்னணு சிகரெட் தடைச் சட்டத்தினை இந்தியா அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக மின்னணு சிகரெட் உபயோகிக்கும் குற்றவாளிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.