Institute for Economics and Peace அமைப்பால் 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு வெளியிடப்பட்டது.
பயங்கரவாதத்தின் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது என்ற நிலையில்2025 ஆம் ஆண்டில் அங்கு 1,139 இறப்புகள் மற்றும் 1,045 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியா 6.43 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் உள்ளது, இங்கு 142-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த அறிக்கை உலகின் மக்கள் தொகையில் சுமார் 99.7%-ஐக் கொண்ட 163 நாடுகளை உள்ளடக்கியது.
உலகளவில், பயங்கரவாத இறப்புகள் 28% குறைந்து 5,582 ஆகவும், சம்பவங்கள் 22% ஆகவும் 2025- ஆம் ஆண்டில் குறைந்துள்ளன.
Islamic State ஆனது உலகளவில் கொடிய பயங்கரவாத அமைப்பாகக் கண்டறியப் பட்டு உள்ளது.