TNPSC Thervupettagam

உலகளாவிய பருவநிலை உறுதிப்பாடு

November 14 , 2025 14 hrs 0 min 6 0
  • பாகுவில் நடைபெறும் COP29 மாநாடு ஆனது, 2035 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் 1.3 டிரில்லியன் டாலர் பருவநிலை நிதியைத் திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட பாகு-பெலெம் என்ற செயல் திட்டத்தினை நிர்ணயித்தது.
  • பருவநிலை நடவடிக்கைகளுக்கான நிதியை விரிவுபடுத்துவதற்காக, மீள் நிரப்புதல், மறு சமநிலைப்படுத்துதல், மறுசீரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் மறுவடிவமைப்பு செய்தல் ஆகிய ஐந்து முன்னுரிமைகளை இந்தச் செயல் திட்டம் குறிப்பிட்டுக் காட்டியது.
  • பிரேசிலின் பெலெமில் நடைபெறும் COP30 மாநாட்டில், இந்த இலக்குகளை உலக நாடுகள் பருவநிலை நீதி மற்றும் சமமான நிதிக்கான மேம்படுத்தக் கூடிய நடவடிக்கைகளாக மாற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டது.
  • இந்த உச்சி மாநாடு பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளை (MDBs) சீர்திருத்துதல், கடன் வழங்கீட்டினை மேம்படுத்துதல் மற்றும் கார்பன் சந்தை ஒருமைப்பாட்டை வலுப் படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்