UNDP மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்னெடுப்பு (OPHI) "Overlapping Hardships: Poverty and Climate Hazards" என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டன.
உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆனது வருமானத்திற்கு அப்பாற் பட்ட சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தில் கடுமையான வறுமையை அளவிடுகிறது.
2025 ஆம் ஆண்டின் அறிக்கை 109 நாடுகளை மதிப்பிட்டு, 1.1 பில்லியன் மக்கள், அதாவது 18.3 சதவீதம் பேர், கடுமையான பல பரிமாண வறுமையில் வாழ்கின்றனர் என்று கண்டறிந்துள்ளது.
ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் சுமார் 43.6 சதவீதம் பேர், அதாவது சுமார் 501 மில்லியன் மக்கள், குறைந்தது பாதியளவிலான MPI குறிகாட்டிகளில் பற்றாக் குறையுடன் கடுமையான வறுமை நிலையை எதிர் கொள்கின்றனர்.
உலக மக்கள்தொகையில் 33.6 சதவீதமாக இருக்கும் குழந்தைகள், பல பரிமாண ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து நபர்களில் 51 சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளனர்.
நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 740 மில்லியன் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் உள்ளனர் என்பதோடுஇது உலகின் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.
சுமார் 80 சதவீத ஏழைகள் வறட்சி, வெள்ளம் அல்லது கடுமையான வெப்பம் போன்ற பருவநிலை ஆபத்துகளுக்கு ஆளாகும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்பதோடுஇது பற்றாக்குறையுடன் சுற்றுச்சூழல் ஆபத்தினையும் சேர்க்கிறது.
இந்தியா 2005-06 ஆம் ஆண்டில் 55.1 சதவீதமாக இருந்த பல பரிமாண வறுமை நிலையை 16.4 சதவீதமாகக் குறைத்து, 414 மில்லியனுக்கும் அதிகமான மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது.
இந்தியாவில் ஏழ்மை நிலையில் உள்ள மக்களில் கிட்டத்தட்ட 99 சதவீதம் பேர் வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்படும் பருவநிலைப் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் வாழ்கின்றனர்.