லண்டனில் அமைந்துள்ள நைட் பிராங்க் எனும் சொத்து ரீதியிலான ஆலோசக நிறுவனத்தின் உலகளாவிய பிரதானக் குடியிருப்புக் குறியீட்டில் புதுடெல்லி மற்றும் மும்பை ஆகியவை முறையே 32 மற்றும் 36 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளன.
இந்தக் குறியீடானது உலகம் முழுவதுமுள்ள 45க்கும் மேற்பட்ட நகரங்களில் அவற்றின் உள்நாட்டுப் பணமதிப்பில் பிரதானக் குடியிருப்புகளின் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து மேற்கொள்ளப்படும் ஒரு மதிப்பீட்டின் அடிப்படையில் ஆனதாகும்.
2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெங்களூரு நான்கு இடங்களுக்குப் பின் தள்ளப் பட்டு 40வது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தக் காலாண்டில் சென்சென், சாங்காய் மற்றும் குவான்சோ ஆகிய மூன்று சீன நகரங்கள் முன்னணியில் உள்ளன.
இந்தக் காலாண்டில், உலகளவில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள நகரமானது நியூயார்க் நகரமாகும்.