TNPSC Thervupettagam

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு 2026

October 15 , 2026 10 days 161 0
  • உலக அறிவுசார் சொத்து அமைப்பானது 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டை வெளியிட்டது. இதில் புத்தாக்கச் செயல்திறன் அடிப்படையில் 139 பொருளாதாரங்களுக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.
  • ஸ்விட்சர்லாந்து தொடர்ந்து 16-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன; இந்தியா ஒட்டுமொத்தமாக 38-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 36 குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதார நாடுகள் மற்றும் மத்திய மற்றும் தெற்காசியாவில் உள்ள 11 பொருளாதார நாடுகள் மத்தியில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியா புத்தாக்க உள்ளீடுகளில் 49வது இடத்தையும், புத்தாக்க வெளியீடுகளில் 25-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியில் உலகளவில் முன்னிலை வகிக்கிறது.
  • ஷென்சென்-ஹாங்காங்-குவாங்சோ தொகுப்பு உலகளவில் முதலிடத்தைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து டோக்கியோ-யோகோஹாமா உள்ளன; பெங்களூரு 25-வது இடத்தையும், டெல்லி 27-வது இடத்தையும் பிடித்துள்ளன.
  • இந்தக் குறியீடு புத்தாக்க உள்ளீடு மற்றும் புத்தாக்க வெளியீடு ஆகிய இரண்டு துணைக் குறியீடுகளின் கீழ் சுமார் 80 குறிகாட்டிகளைப் பயன்படுத்துகிறது; அவற்றின் மதிப்பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்