TNPSC Thervupettagam

உலகளாவிய பொது சுகாதார சேவைப் பரவலின் நிலை 2025

December 12 , 2025 15 hrs 0 min 39 0
  • “உலகளாவிய சுகாதார சேவை வழங்கலின் பரவலைக் கண்காணித்தல் (UHC): 2025 உலகளாவிய கண்காணிப்பு அறிக்கை” என்ற அறிக்கையானது உலக வங்கி குழுவால் வெளியிடப்பட்டது.
  • உலகளவில் 10 பேரில் ஒருவர் தீவிர வறுமை கோடான, ஒரு நாளைக்கு 3 டாலருக்கும் குறைவான பணத்தைக் கொண்டு வாழ்கின்றனர்.
  • உலகளாவிய UHC சேவை பரவல் குறியீடு (SCI) 2000 ஆம் ஆண்டில் 54 ஆக இருந்து 2023 ஆம் ஆண்டில் 71 ஆக உயர்ந்தது.
  • தனது வருவாயிலிருந்து (OOP) மேற்கொள்ளும் சுகாதார செலவுகள் காரணமாக நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களின் பங்கு 2000 ஆம் ஆண்டில் 34 சதவீதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டில் 26% ஆகக் குறைந்தது.
  • UHC சேவை வழங்கலில் முன்னேற்றம் ஆனது 2015 ஆம் ஆண்டு முதல் மெதுவாக உள்ளது.
  • சேவைப் பரவல் குறியீடு (SCI) ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் 74 அளவினை மட்டுமே எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இது உலக மக்கள்தொகையில் 24% பேர் இன்னும் சுகாதாரம் தொடர்பான நிதி நெருக்கடியை எதிர்கொள்ள செய்யும்.
  • தொற்று நோய்க் கட்டுப்பாட்டில் சுகாதார சேவை வழங்கலின் பரவல் முக்கியமாக மேம்பட்டுள்ளது.
  • இனப்பெருக்கம், பேறு காலம், பச்சிளம் குழந்தை மற்றும் குழந்தை சுகாதார (RMNCH) சேவைகள் குறைந்தபட்ச ஆதாயங்களைக் கண்டன.
  • தொற்று அல்லாத நோய்கள் (NCDs) மிகக் குறைந்த அளவில் சேவை வழங்கப்படும் களமாகவே உள்ளன.
  • ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் இன்னும் OOP சுகாதார செலவினங்கள் காரணமாக விகிதாசார அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்