TNPSC Thervupettagam

உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கை 2026

June 16 , 2026 13 hrs 0 min 30 0
  • உலக வங்கியானது உலகளாவிய பொருளாதாரப் போக்குகள் மற்றும் கணிப்புகளைப் பற்றிய தனது முதன்மையான அரையாண்டு அறிக்கையான உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் (GEP) அறிக்கை - ஜூன் 2026-ஐ வெளியிட்டது.
  • கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகான மிகக் குறைந்த வளர்ச்சியாக, 2026-ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 2.5% ஆக இருக்கும் என இந்த அறிக்கை கணித்துள்ளது.
  • வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களின் (EMDEs) வளர்ச்சி 2026-ஆம் ஆண்டில் 3.6% ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.6% வளர்ச்சியடையும் என இந்த அறிக்கை கணித்துள்ளது, இதன் மூலம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
  • எரிசக்திச் சந்தைகள் மற்றும் நிதி அமைப்புகளில் ஏற்படும் இடையூறுகள், உலகளாவிய வளர்ச்சியை 2026-ஆம் ஆண்டில் 1.3 சதவீதமாகக் குறைக்கக் கூடும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்