IUCN அமைப்பானது மண் பாதுகாப்புச் சட்டம் குறித்த தீர்மானம் 007 என்பதை ஏற்று, மண் பாதுகாப்புக்கான உலகின் முதல் மாதிரிச் சட்டக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
மண் வளங்காப்பு, மீளுருவாக்க வேளாண்மை மற்றும் மண் வளத்திற்கான சட்டப் பூர்வப் பொறுப்புக் கூறல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் தேசியச் சட்டங்களை உருவாக்குவதில் 90 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தத் தீர்மானம் வழிகாட்டும்.
சர்வதேச மண் வளங்காப்பு அமைப்புகள் மற்றும் சிந்தனைக் குழுக்கள் இந்தத் தீர்மானத்தை இணைந்து ஆதரித்தன.
உணவு, நீர், பல்லுயிர் பெருக்கம் மற்றும் பருவநிலை மீள்தன்மைக்கு மண் வளங்காப்பு அவசியம் என்பதை ஓர் உலகளாவிய வளங்காப்பு அமைப்பு முதன்முறையாக அதிகாரப் பூர்வமாக அங்கீகரிப்பதை இது குறிக்கிறது.
இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மண் வளங்காப்பு குறித்த சர்வதேச உடன்படிக்கை அல்லது உலகளாவியச் சட்டக் கருவிக்கான கருத்தாக்கங்களை உருவாக்க IUCN அமைப்பானது ஒரு பணிக்குழுவை உருவாக்க உள்ளது.
முன்மொழியப்பட்ட மாதிரி மண் பாதுகாப்புச் சட்டம், வேளாண்மை, பருவநிலைக் கொள்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புத் திட்டங்களில் மண் பாதுகாப்பை ஒருங்கிணைக்க உலக நாடுகளுக்கு உதவும்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், விழிப்புணர்வு மற்றும் விரிவான மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்க பல நாடுகளுடன் ஆலோசனைகள் நடத்தப் பட்டுள்ளன.