பேரிடர் அபாயக் குறைப்பு குறித்த 2025 ஆம் ஆண்டு உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையின் படி (GAR 2025), உலகளாவிய காட்டுத்தீயானது மொத்தப் பொருளாதார இழப்புகளில் சுமார் 106 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புகளை ஏற்படுத்தியது.
காட்டுத்தீ என்பது சமூக, பொருளாதார அல்லது சுற்றுச்சூழல் மதிப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு எதிர்பாராத மற்றும் கட்டுப்பாடற்றத் தாவரங்களில் ஏற்படும் தீ ஆகும்.
சுற்றுச்சூழல் பாதிப்புகளில் CO2 உமிழ்வு, பல்லுயிர் இழப்பு மற்றும் பருவநிலை பின்னூட்டச் சுழல்கள் ஆகியவை அடங்கும்.
மனிதப் பாதிப்புகளில் சுவாச மற்றும் இருதயக் கோளாறுகள் மற்றும் சமூகங்களின் இடம் பெயர்வு ஆகியவை அடங்கும்.
பருவநிலை மாற்றம், நிலப் பயன்பாட்டு மாற்றங்கள், மனித நடவடிக்கைகள் மற்றும் எரிபொருள் கிடைக்கும் தன்மை காரணமாக காட்டுத்தீ அபாயங்கள் அதிகரித்து வருகின்றன.