உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது World Mental Health Today மற்றும் Mental Health Atlas 2024 எனும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது.
உலகளவில் சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனநலப் பாதிப்பு நிலைமைகளுடன் வாழ்கிறார்கள் என்பதை அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.
உலகளவில் நீண்டகால இயலாமைக்கு மனநலக் கோளாறுகள் இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளன.
பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை உலகளவில் மிகவும் பொதுவான மனநலப் பாதிப்பு நிலைமைகள் ஆகும்.
இந்தக் கோளாறுகள் ஒவ்வோர் ஆண்டும் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உலகளாவியப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன.
2021 ஆம் ஆண்டில், அனைத்து நாடுகளிலும், வருமான நிலைகளிலும் சுமார் 727,000 பேர் தற்கொலை செய்து உயிரிழந்தனர்.
அனைத்து பிராந்தியங்களிலும் இளையோர்களிடையேயான மரணத்திற்கு தற்கொலை ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
இந்தியாவில், 13.7% மக்கள் தங்கள் வாழ்நாளில் மனநலக் கோளாறுகளை அனுபவித்து உள்ளனர் என்று NIMHANS (தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம்) தெரிவித்துள்ளது.
2015–16 ஆம் ஆண்டிற்கான தேசிய மனநலக் கணக்கெடுப்பு, இந்திய வயது வந்த நபர்களில் 10.6% பேருக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்களில் 70% முதல் 92% பேர் போதுமான சிகிச்சையைப் பெறுவதில்லை.